Aditya Hrudayam Lyrics in Tamil

1209
Aditya Hrudayam in Tamil

Aditya Hrudayam or Aditya Hridaya Stotra is one of the greatest mantras ever associated with Aditya or the Sun God (Surya). The Aditya Hridaya Stotra is named because, according to the great commentator of the Ramayana, Sri Govindaraja, it is ‘The Prayer that pleases the Heart of Lord Aditya’. Please find Aditya Hrudayam Lyrics in Tamil.

Aditya Hrudayam Lyrics – ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் (Aditya Hrudayam Lyrics in Tamil) –  எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் பொருள் இந்த பாடல் வரிகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது…

Aditya Hrudayam Lyrics in Tamil

ததோ யுத்த பரிஶ்ரான்தம் ஸமரே சிம்தயா ஸ்திதம் |
ராவணம் சாக்ரதோ த்றுஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1 ||

தைவதைஶ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம் |
உபகம்யா ப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் றுஷிஃ || 2 ||

ராம ராம மஹாபாஹோ ஶ்றுணு குஹ்யம் ஸனாதனம் |
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||

ஆதித்ய ஹ்றுதயம் புண்யம் ஸர்வஶத்ரு வினாஶனம் |
ஜயாவஹம் ஜபேன்னித்யம் அக்ஷய்யம் பரமம் ஶிவம் || 4 ||

ஸர்வமம்கள மாங்கள்யம் ஸர்வ பாப ப்ரணாஶனம் |
சிம்தாஶோக ப்ரஶமனம் ஆயுர்வர்தன முத்தமம் || 5 ||

ரஶ்மிமம்தம் ஸமுத்யன்தம் தேவாஸுர னமஸ்க்றுதம் |
பூஜயஸ்வ விவஸ்வன்தம் பாஸ்கரம் புவனேஶ்வரம் || 6 ||

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரஶ்மிபாவனஃ |
ஏஷ தேவாஸுர கணான் லோகான் பாதி கபஸ்திபிஃ || 7 ||

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஶ்ச ஶிவஃ ஸ்கன்தஃ ப்ரஜாபதிஃ |
மஹேன்த்ரோ தனதஃ காலோ யமஃ ஸோமோ ஹ்யபாம் பதிஃ || 8 ||

பிதரோ வஸவஃ ஸாத்யா ஹ்யஶ்வினௌ மருதோ மனுஃ |
வாயுர்வஹ்னிஃ ப்ரஜாப்ராணஃ றுதுகர்தா ப்ரபாகரஃ || 9 ||

ஆதித்யஃ ஸவிதா ஸூர்யஃ ககஃ பூஷா கபஸ்திமான் |
ஸுவர்ணஸத்றுஶோ பானுஃ ஹிரண்யரேதா திவாகரஃ || 10 ||

ஹரிதஶ்வஃ ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஸப்தி-ர்மரீசிமான் |
திமிரோன்மதனஃ ஶம்புஃ த்வஷ்டா மார்தாண்டகோ‌உம்ஶுமான் || 11 ||

ஹிரண்யகர்பஃ ஶிஶிரஃ தபனோ பாஸ்கரோ ரவிஃ |
அக்னிகர்போ‌உதிதேஃ புத்ரஃ ஶங்கஃ ஶிஶிரனாஶனஃ || 12 ||

வ்யோமனாத ஸ்தமோபேதீ றுக்யஜுஃஸாம-பாரகஃ |
கனாவ்றுஷ்டி ரபாம் மித்ரோ வின்த்யவீதீ ப்லவங்கமஃ || 13 ||

ஆதபீ மம்டலீ ம்றுத்யுஃ பிங்களஃ ஸர்வதாபனஃ |
கவிர்விஶ்வோ மஹாதேஜா ரக்தஃ ஸர்வபவோத்பவஃ || 14 ||

னக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிபோ விஶ்வபாவனஃ |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஶாத்மன்-னமோ‌உஸ்து தே || 15 ||

னமஃ பூர்வாய கிரயே பஶ்சிமாயாத்ரயே னமஃ |
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே னமஃ || 16 ||

ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய னமோ னமஃ |
னமோ னமஃ ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய னமோ னமஃ || 17 ||

னம உக்ராய வீராய ஸாரங்காய னமோ னமஃ |
னமஃ பத்மப்ரபோதாய மார்தாண்டாய னமோ னமஃ || 18 ||

ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே |
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே னமஃ || 19 ||

தமோக்னாய ஹிமக்னாய ஶத்ருக்னாயா மிதாத்மனே |
க்றுதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே னமஃ || 20 ||

தப்த சாமீகராபாய வஹ்னயே விஶ்வகர்மணே |
னமஸ்தமோ‌உபி னிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே || 21 ||

னாஶயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்றுஜதி ப்ரபுஃ |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபிஃ || 22 ||

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டிதஃ |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23 ||

வேதாஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூனாம் பலமேவ ச |
யானி க்றுத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவிஃ ப்ரபுஃ || 24 ||

ஏன மாபத்ஸு க்றுச்ச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |
கீர்தயன் புருஷஃ கஶ்சின்-னாவஶீததி ராகவ || 25 ||

பூஜயஸ்வைன மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி || 26 ||

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி |
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் || 27 ||

ஏதச்ச்ருத்வா மஹாதேஜாஃ னஷ்டஶோகோ‌உபவத்-ததா |
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவஃ ப்ரயதாத்மவான் || 28 ||

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் |
த்ரிராசம்ய ஶுசிர்பூத்வா தனுராதாய வீர்யவான் || 29 ||

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்றுஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் |
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்றுதோ‌உபவத் || 30 ||

அத ரவிரவதன்-னிரீக்ஷ்ய ராமம் முதிதமனாஃ பரமம் ப்ரஹ்றுஷ்யமாணஃ |
னிஶிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி || 31 ||

இத்யார்ஷே ஶ்ரீமத்ராமாயணே வால்மிகீயே ஆதிகாவ்யே யுத்தகாண்டே பஞ்சாதிக ஶததம ஸர்கஃ ||

Aditya Hrudayam in Tamil

Aditya Hrudayam Stotram Lyrics in Tamil Meaning & Translation

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||
விளக்கம்: ராம ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான்.

தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||
விளக்கம்: போர்க்களத்தின் வாயிலிலே, அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்.

ராம ராம மஹா பாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
ஏன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||
விளக்கம்: பலமான ஆயுதம் பொருந்திய ராம பிரானே, சத்ருக்க்ளை தோற்கடித்து போரில் வெல்வதற்கான நிரந்தரமான தீர்வை உனக்கு இப்போது சொல்கிறேன்.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸ்ர்வ ஷத்ரு வினாஷனம் |
ஜயாவஹம் ஜபேன்னித்யம் அக்ஷய்யம் பரமம் ஷிவம் || 4 ||
விளக்கம்: ஆதித்ய ஹ்ருதயம் ஒரு புண்ணிய மிக்க மந்திரம் ஆகும். எதிரிகளை வீழ்த்தும். தினமும் பக்தியுடன் அதை பாராயணம் செய்பவர்களுக்கு நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும்.

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரனாஷனம் |
ச்சிந்தா ஷோக ப்ரஷமனம் ஆயுர்வர்ததனம் உத்தமம் || 5 ||
விளக்கம்: ஸர்வ ஸௌபாக்யங்களையும் அளிக்கும்; ஸர்வ பாபங்களையும் அழிக்கும்; சிந்தையில் உள்ள கவலைகளை ஒழிக்கும்; ஆயுளை அதிகரிக்கும்.

ரஷ்மி மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் தனது பொன்னான கிரணங்களை எங்கும் பரப்புகிறார். தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் படுகிறார். திவ்யமான ஒளியின் வண்மையால் அண்ட சராசரத்திற்க்கும் அதிபதியாக விளங்குகிறார்.

ஸ்ரவ தேவாத்மகோ ஹேஷ: தேஜஸ்வி ரஷ்மி பாவன: |
ஏஷ தேவாசுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: || 7 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் தனது ஒளிமிக்க கிரணங்களால், தேவர்களும் அசுரர்களும் கூட அடங்கிய எல்லா உலகங்களையும் காப்பாற்றுகிறார்.

ஏஷ ப்ரம்மாச விஷ்ணுச்ச ஷிவ ஸ்கந்த: ப்ரஜாபதி: |
மஹேந்த்ரோ தனத: காலோ யம: சோமோ ஹ்யபாம் பதி: || 8 ||
விளக்கம்: ஸூர்ய பகவானே ப்ரம்மன், விஷ்ணு, சிவன், ஸ்கந்தன், காலன், ப்ரஜாபதி, மஹா இந்த்ரன், யமன், சந்த்ரன், குபேரன் மற்றும் வருணன்.

பித்ரோ வஸவ: ஸாத்யா ஹ்யஷ்வினௌ மருதோ மனு: |
வாயுர்வஹ்னி ப்ரஜாப்ராண: ருது கர்த்தா ப்ரபாகர: || 9 ||
விளக்கம்: ஸூர்ய பகவானே பித்ரு, வசு, தனங்களை அளிப்பவர், தெய்வாம்ஸமுள்ள யோகிகள், தேவர்கள், தேவலோக வைத்தியர்கள், மனு, வாயு, அக்னி ஆவார். அவரே எல்லா பருவங்களையும் சீதோஷ்ணங்களையும் ஷ்ருஷ்டிக்கிறார். எல்லா உயிர்களையும் காக்கிறார். தனது ஒளியால் ஞானத்தை கொடுக்கிறார். உதயத்தை ஏற்படுத்துகிரார்.

ஆதித்ய ஸ்விதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான் |
சுவர்ண ஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர: || 10 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் அதிதியின் புதல்வன். அதிதி தேவி தேவர்களுக்கெல்லாம் தாய். அண்ட சராசரங்களையும் படைத்தவள். தங்கத்திற்கு நிகரான ஒளியைக் கொண்டவள். அவளே எல்லா உலகங்களுக்கும் வாழ்வாதாரம். அவளே விடியலின் தேவதை.

ஹரித்ஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: சப்த சப்தி: மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்புஸ்த்வஷ்ட மார்த்தாண்ட அம்ஷுமான் || 11 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் ஆயிரம் கிரணங்களை உடையவர். ஏழு பசுமஞ்சள் நிறமுடைய குதிரைகளை உடையவர். இருளை அகற்றுகிறவர். துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர். தனது கிரணங்களை எங்கும் நிறைக்கிரார். எங்கும் நிறைந்திருக்கிரார்.

ஹிரண்ய கர்ப்ப ஷிஷிரஸ்தாபனோ பாஸ்கரோ ரவி: |
அக்னி கர்ப்போ திதே புத்ர: ஷன்க: ஷிஷிர நாஷன: || 12 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர். கடுங்குளிரை அகற்றுபவர். நெருப்பே உருவானவர். தீய எண்ணங்களையும் தீமைகளையும் அகற்றுபவர்.

வ்யாமனாத ஸ்தமோபேதி ருக்யஜுஸ்ஸாம பாரக: |
கனவ்ரிஷ்டி ரபாம்மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம: || 13 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர். மழையை பொழிவிக்கிறார். நீர் நிலைகளை நேசிக்கிறார். விந்த்ய மலைகளை தெய்வீகமாக கடக்கிறார்.

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள ஸர்வதாபன: |
கவிர்விஷ்வோ மஹாதேஜா ரக்த ஸர்வபவோத்பவ: || 14 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் அண்ட வெளியின் ஆசான். அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார். எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஷ்வ பாவன: |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மன் நமோஸ்துதே || 15 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் நக்ஷத்ரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் தலைவர். அவரே இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கிறவர். கதிரவனின் பன்னிரெண்டு (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக இருக்கிறார். ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம்.

நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||
விளக்கம்: ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.

ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம: |
நமோ நம: ஸஹஸ்ராம்ஷோ ஆதித்யாய நமோ நம: || 17 ||
விளக்கம்: வெற்றியாளனுக்கு நமஸ்காரம். அந்த வெற்றியால் கிட்டும் அனைத்து செல்வங்களுக்கும் நமஸ்காரம். ஆயிரம் கதிர்களுடையவனுக்கு நமஸ்காரம். அதிதியின் புத்ரனுக்கு நமஸ்காரம்.

நம: உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: || 18 ||
விளக்கம்: மிகுந்த உக்கிரமும் தைரியமும் வாய்ந்தவனுக்கு நமஸ்காரம். தடைகளற்றவனுக்கு நமஸ்காரம். தாமரையை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம். வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

ப்ரமஹேஷான் அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷெ நம: || 19 ||
விளக்கம்: அதிதியின் புத்ரனாகிய ஸூர்ய பகவானே ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு ஆவார். அவருக்கு நமஸ்காரம். எங்கும் வியாபித்து எங்கும் நிறைந்திருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.

தமோக்னாய ஹிமாக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ரதக்னாக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20 ||
விளக்கம்: இருளையும் குளிரையும் போக்கி எதிரிகளை என்றும் அழிக்கும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம். செய் நன்றி மறத்தலை அகற்றி ஒளியால் திகழும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.

தப்தசாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நமஸ்தமோபினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் ஒளிப்பிழம்பானவர். அவருக்கு நமஸ்காரம். அவரே உலகத்தை வடிவமைத்தவர். இருளை அகற்றி உலகத்தோர் காணும் வண்ணம் அமைந்துள்ள ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.

நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ரஜதி ப்ரபு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: || 22 ||
விளக்கம்: ஸூர்ய பகவானே இந்த உலகத்தை உருவாக்கி, காத்து ரக்ஷிப்பவர். அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம். அவரது அபரிமிதமான ஒளியாலேயே மழையைத் தருகிறார். அவரே இவ்வுலகை ஆள்கிறார்.

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டித: |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம்ச பலம் ச்சைவாக்னி ஹோத்ரிணாம். || 23 ||
விளக்கம்: உலகத்து உயிர்களெல்லாம் உறங்கும் போதும் ஸூர்ய பகவான் விழித்து இருக்கிறார். அவர் அக்னியால் ஹோமம் செய்கிறார். அவரே அக்னி. அக்னி ஹோமத்தின் கனிகளும் பலனும் அவரே.

வேதஷ்ச க்ரத்வஷ்ச்சைவ க்ரதூனாம் பலமேவச |
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: || 24 ||
விளக்கம்: ஸூர்ய பகவான் வேதங்களின் சாரத்தில் இருக்கிறார். தத்தம் கடமைகளை உண்மையுடன் செய்பவர்களுக்கு, கடமையின் பலனாக இருக்கிறார். வல்லமை பொருந்திய ஸூர்ய பகவானே எல்லா செயல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

ஏனமாபத்ஸு க்ருச்ரேப்ஷு கான்தார்யேஷு பயேஷுச |
கீர்த்தயன்புருஷ: கஷ்சின்னாவசீததி ராகவா || 25 ||
விளக்கம்: ஓ ராகவனே! அவமானத்திலோ, பயத்திலோ, துன்பத்திலோ இருப்பவர்கள் ஸூர்ய தேவனின் நாமத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷ்யஷி || 26 ||
விளக்கம்: தேவர்களின் அதிபதியும் இந்த உலகின் அரசனுமான ஸூர்ய பகவானை முழுமையான அர்ப்பணிப்போடு வணங்க வேண்டும். இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மும்முறை ஜபித்தால் வாழ்வின் எல்லா போர்களிலும் வெற்றி கிட்டும்.

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி |
ஏவமுக்த்வா தடாகஸ்த்யோ ஜகாமச்ச யதாகதம் || 27 ||
விளக்கம்: அக்ஸ்த்ய முனிவர், தான் கிளம்பும் முன், ராமபிரானைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ஓ ராமா, வலிமையான தோள்கள் உள்ளவனே, இந்த க்ஷணம் முதல், ராவணனை நிச்சயமாக வெற்றி கொள்வாய்.

ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டஷொகோ பவத்தத |
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ ப்ரயதத்மவான் || 28 ||
விளக்கம்: அக்ஸ்த்ய முனிவரின் மொழிகளைக் கேட்ட ஸ்ரீராமன், தனது துன்பங்களையும் கவலைகளையும் துறந்தான். தனக்கு மிகப் பெரிய பலம் வந்து சேர்ந்ததைப் போல உணர்ந்தான்.

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் |
த்ரிராசம்ய ஷுசிர்போத்வா தனுராத்யாய வீர்யவான் || 29 ||
விளக்கம்: ஸ்ரீராமன் ஸூர்ய பகவானைப் பார்த்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னார். வீறு பெற்றார். மும்முறை நீரை அருந்தி தன்னை சுத்தி செய்து கொண்டு, வீரத்துடன் தந்து வில்லை எடுத்தார்.

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபாகமத் |
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் || 30 ||
விளக்கம்: யுத்தக் களத்தில் ராவணனைக் கண்ணுற்ற ஸ்ரீராமன், அவனைக் கொல்லும் பொருட்டு முன்னேறினான்.

அத ரவிரவதன்னிரீக்ஷய ராமம் முதிதமனாஹ ப்ரமம் ப்ரஹ்ருஷ்யமான: |
நிஷிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா சுரகண மத்யகதோ வாச்ஸ்த்ரவேதி || 31 ||

விளக்கம்: யுத்த களத்தில் ஸ்ரீராமனைப் பார்த்த ஸூர்ய பகவான், ராவணனின் முடிவு உறுதி எனத் தெரிந்து கொண்டான். ஸ்ரீராமனுக்கு, அதற்கான வழியையும் காண்பித்தான்.

Also Read:

Aditya Hridaya Stotra Lyrics in other languages: Hindi | Translation | Gujarati | Telugu | Tamil | Kannada | Malayalam | Bengali | Odia

Facebook Comments